தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை!

 
namakkal

நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் தனியார் இ-சேவை மையத்தில் அரசு நிர்ணயித்த சேவைக்கட்டணத்தை தவிர அதிகக்கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதன் பேரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் முதியோர் ஓய்வூதிய திட்டம் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டாமாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் இ-சேவை மையத்தின் பயனாளர் குறியீடு முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வரப்பெற்றாலோ சம்மந்தப்பட்ட இ-சேவை மையத்தினை அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரால் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

e- sevai

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கணினி மையங்கள் பொது இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கு முறையான அரசு அனுமதி பெறாமல் முற்றிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட Citizen Login முறையை பயன்படுத்தி வருவாய் துறை சார்ந்த சான்றுகள் மற்றும் முதியோர் உதவித்தொகை சம்மந்தமான விண்ணப்பங்களை பொதுமக்களிடம் இருந்து அதிகக்கட்டணம் பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்தாலோ மற்றும் இதன் தொடர்பாக விளம்பர பலகைகள் வைத்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக்கட்டணம் பெறும் பொது இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdest@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1997 மூலமாக புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.