அரூர் அருகே சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் பலி!

 
accident

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருசக்கர வாகனம் மீது பால் குளிரூட்டும் வாகனம் மோதிய விபத்தில் பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை பேரேறி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தகிரி மகன் ஞானசேகரன். முதுகலை பட்டதாரி. இவர் நேற்று தனது நண்பரான திருப்பூர் மாவட்டம் சிறுபுழுவாபட்டியை சேர்ந்த துர்கேஷ் என்பவருடன் அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அரூர் அடுத்த முனியப்பன் கோவில் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது பால் குளிரூட்டும் வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துர்கேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆட்டோ மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

dharmapuri gh

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் போலீசார், பலியான ஞானசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் குளிரூட்டும் வாகன ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.