ஊத்தங்கரை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி!

 
dead

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்.  இவரது மனைவி அகிலா. இவர்களது 2 வயது மகன் சுதர்சன்.  நேற்று காலை குழந்தை சுதர்சன் அருகேயுள்ள கணேசன் என்பவரது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அவரது வீட்டின் தண்ணீர் தொட்டி மூடாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதில் குழந்தை சுதர்சன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

uthangarai

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தைதயை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் சுதர்சன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவ குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.