ராணிப்பேட்டை அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கித்தவித்த 7 பேர் மீட்பு!

 
palar

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 இளைஞர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் உள்வட்டம் மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நந்தகுமார்(18), சின்ராசு(18), விஸ்வநாதன்(20), சுபாஷ்(20), ரமேஷ்(20), கோகுல்(20) மற்றும் அமதன்(20). நண்பர்களான இவர்கள் நேற்று மாமண்டூர் - புதூர் கிராமங்களுக்கு இடையில் உள்ள பாலாற்றுக்கு குளிக்க சென்றுளள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 7 பேரும் ஆற்றின் நடுவில் இருந்த கரையில் ஏறிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

ranipet

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆற்றில் சிக்கிய 7 பேரையும் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம் மாமண்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.