ஈரோடு மாவட்டத்தில் 10-வது கட்ட முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

 
vaccine

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த 10வது கட்ட  கொரோனா தடுப்பூசி முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

vaccine

இதுவரை 9 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ள நிலையில், 10 -வது கட்ட தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் 10-வது கட்ட தடுப்பூசி முகாம் 2 நாட்களாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 800 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

ஈரோடு மாநகர பொறுத்தவரை 50 இடங்களிலும், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 2 நாட்கள் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.