திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது... 60 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் காரில் காஞ்சா கடத்திய 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சா, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், பட்டிவீரன்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் மறித்து சோதனையிட்டனர்.

arrest

அப்போது, காரில் பண்டல்களில் 60 கிலோ கஞ்சா கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), நிலக்கோட்டையை சேர்ந்த சக்சேனா ஸ்ரீபால் சேத்னா (25), சோழவந்தனை சேர்ந்த தனலட்சுமி (50), ராசாத்தி (58), நாகபாண்டி (30) ஆகியோர், கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, 5 பேரையும் கைது செய்த தனிப்படையினர், அவர்களை பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.