கோவையில் தம்பதியை தாக்கி 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

 
cbe theft

கோவை ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கிவிட்டு 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ராமநாதபுரம் ஆல்வின் நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாந்தி. இவர்களது 2 மகள்களும் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் நிலையில், வயதான தம்பதியினர் இருவரும் தனியே வசித்து வந்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜசேகரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 4 மர்மநபர்கள், ராஜசேகர் மற்றும் அவரது மனைவி சாந்தியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

police

இந்த சம்பம் குறித்து ராஜசேகர் அளித்த தகவலின் பேரில், ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த வீட்டில் இருந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் 4 பேரும் ஆங்கிலத்தில் உரையாடியது தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  வீட்டில் தனியாக வயதான  தம்பதியை தாக்கிவிட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.