கல்லூரி பேராசிரியரின் வீடு புகுந்து 3.5 பவுன் தாலி செயின் திருட்டு!

 
robbery

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரின் வீட்டிற்குள் புகுந்து 3.5 பவுன் தாலி செயினை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையம் ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 11.30 மணி அளவில் வீட்டின் மற்றொரு அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால்  விஜயகுமார் எழுந்து அந்த அறையை நோக்கி சென்றார். அப்போது, ஒரு நபர் பீரோவில்  இருந்த துணிகளைக் கலைத்து கொண்டிருந்தார். 

police

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார் திருடன்..திருடன் என சத்தம் போட்டார்.  அந்த மர்மநபர் வீட்டை விட்டு வெளியே தப்பி ஓடிச்சென்று விட்டார். பின்னர் விஜயகுமார் பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 3.5 பவுன் தாலி செயினை அந்த மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து விஜயகுமார் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.