16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

திருப்பூர்

தாராபுரம் அருகே 16 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (21). இவர் கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் தங்கி, கிணறு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யபிரகாஷ், மாணவியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார். மாணவியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டுத்தரக்கோரி, மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ வழக்கு என்பதால், இந்த புகார் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டது. அங்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளக்கோவில் அருகே பதுங்கியிருந்த சூர்யபிரகாஷை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். மேலும், அவருடன் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் சூயர்பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து, சிறையில் அடைத்தனர்.