நில தகராறில் இளைஞர் கல்லால் அடித்துக்கொலை – இருவர் கைது

 

நில தகராறில் இளைஞர் கல்லால் அடித்துக்கொலை – இருவர் கைது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே நிலத் தகராறில் இளைஞரை கல்லால் தாக்கி படுகொலை செய்த 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள முத்துசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா(23). கூலி தொழிலாளி. தீபக் ராஜாவின் உறவினர் நிலம் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நில தகராறில் இளைஞர் கல்லால் அடித்துக்கொலை – இருவர் கைது

இந்த நிலையில் நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்றிரவு தீபக் ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஹேமநாதன் (24) மற்றும் சோணைமுத்து (29) தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஹேமநாதன் மற்றும் சோணைமுத்து ஆகியோர், தீபக் ராஜாவை கருங்கல்லினால் தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தியேலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலின் பேரில் கீழக்கரை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ஹேமநாதன் மற்றும் சோணைமுத்துவை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.