மயிலாடுதுறையில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

 

மயிலாடுதுறையில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் ஜானகி (72). இவரது கணவர் சண்முகம் உயிரிழந்த நிலையில், மகன் மருத்துவர் பாரிராஜன் நடுத்திட்டு பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அவரது கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு, சுமார் 10 பவுன் தங்க செயினை திருடிச்சென்றனர்.

மயிலாடுதுறையில் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை

இன்று காலை ஜானகியின் வீட்டில் இருந்த காரை எடுக்கவந்த பாரிராஜனின் ஓட்டுநர் ஜான்சன், வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாரிராஜன், மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மணல்மேடு காவல் நிலையம் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.