முல்லை பெரியாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

 

முல்லை பெரியாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

தேனி

முல்லை பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியிருந்தது. இதனால், இருபோக நெல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று இன்று தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

அதன்படி, இன்று காலை முல்லை பெரியாறு அணையில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீரை திறந்து வைத்தார். விவசாய பாசனத்திற்கு 200 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடி வீதமும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏ-க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகராஜன், பெரியகுளம் சரவணகுமார், தேனி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.