தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களை அளித்த தேனி மாவட்டம்!

 

தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களை அளித்த தேனி மாவட்டம்!

தமிழக முதலமைச்சர்களை அதிக அளவில் வழங்கிய மாவட்டம் தேனி என்றே சொல்லலாம். தமிழக மக்கள் புரட்சித் தலைவர் என போற்றும் எம்ஜிஆர், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் என 3 முதலமைச்சர்கள் தேனி மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவை தொடங்கிய பொன்மனச் செம்மல் 1984 ஆம் ஆண்டு போட்டியிட விரும்பிய தொகுதி ஆண்டிப்பட்டி. அங்கு வெற்றிபெற்றுதான் 1984 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வரானார். எம்ஜிஆர்க்கு பின்னர், தேனி மாவட்டத்தை அதிமுக கோட்டையாக வலுப்பெற வைத்தத்தில் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.

தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களை அளித்த தேனி மாவட்டம்!

2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரானார். பின்னர் வழக்கு காரணமாக தேனி மாவட்டத்தின் தேனி மாவட்ட மைந்தரான பன்னீர்செல்வத்தை முதல்வர் பொறுப்புக்கு அம்மா கொண்டு வந்தார்.

வழக்கில் இருந்து வெளிவந்த அம்மா, 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அந்த வெற்றியை ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக அளித்து அம்மாவுக்கு விசுவாசம் காட்டினார் பன்னீர்செல்வம். அம்மா முதல்வர் பதவியை அலங்கரிக்க பன்னீர்செல்வம் பம்பரமாக சுழன்று வேலை செய்தார்.

தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களை அளித்த தேனி மாவட்டம்!

அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வைகை சேகரை காட்டிலும் 41 ஆயிரத்து 201 ஓட்டுகள் அதிகம் பெற்று அம்மா வெற்றி பெற்றார். சென்னையில், அம்மா வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் தேர்தல் வெற்றியையும் சேர்த்து கொண்டாட ஏற்பாடு. அப்போது பிரமுகர்கள், தொண்டர்களிடமிருந்து வாழ்த்துக்களையும் பூங்கொத்துக்களையும் பெற்றுக்கொண்ட அம்மா, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வத்தை மெச்சினார்.

தமிழகத்துக்கு மூன்று முதல்வர்களை அளித்த தேனி மாவட்டம்!

அம்மா அளித்த முதல்வர் பதவியில், பன்னீர்செல்வம் 5 மாத காலம் உண்மையாக உழைத்தார், விசுவாசமாக இருந்தார். இடைத்தேர்தல் வெற்றிக் கனியை பறிந்து கொண்டுவந்துள்ளார் என பாராட்டினார்.
அதன்பின் தலைமையகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்றத்தில் அதிமுக தலைவராக அம்மாவை தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி கவர்னர் ராமமோகன் ராவிடம் பன்னீர்செலவம் தனது ராஜினாமா கடிதத்தினை அளித்தார். அதன்பின் எல்லா நடைமுறைகளும் முடிந்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்படி, ஒரு மாவட்டத்தில் இருந்து, 3 அதிமுக முதல்வர்களை தந்த சிறப்பு தேனி மாவட்டத்துக்கு உண்டு. தேனி மாவட்டத்தை அதிமுக கோட்டையாக கட்டி எழுப்பிய பெருமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு என்பதையும் காலம் குறித்து வைத்துள்ளது.