பென்னிகுவிக் பிறந்தநாள் விழா… மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மரியாதை…

 

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா… மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மரியாதை…

தேனி

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் 180-வது பிறந்தநாளையொட்டி, நேற்று தேனியில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக், திருவிதாங்கூர் மன்னரிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு, தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் முல்லைப் பெரியாறு ஆற்றில், கடந்த 1887ஆம் ஆண்டு அணையை கட்ட தொடங்கினார்.

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா… மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மரியாதை…

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 1895ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அணையை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

பொறியாளர் பென்னிகுவிக்கின் தன்னலமற்ற செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு மணிமண்டபம் அமைத்து, அதில் அவரது வெண்கல சிலையை நிருவி உள்ளது. மேலும், ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான ஜனவரி 15ஆம் தேதி அன்று அரசு சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா… மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மரியாதை…

அதன்படி நேற்று, பென்னிக்குவிக்கின் 180-வது பிறந்தநாளையொட்டி, லோயர் கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, அதிமுக எம்.பி., ரவீந்திரநாத், எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் அவரது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், ஜான் பென்னி குவிக்கின் நினைவாக தங்களது குழந்தைகளுக்கு அவரது பெயரை சூட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.