தேனியில் காதல் திருமணம் செய்த சிறுமி தற்கொலை – போலீசார் விசாரணை!

 

தேனியில் காதல் திருமணம் செய்த சிறுமி தற்கொலை – போலீசார் விசாரணை!

தேனி

தேனி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகள் நீனா (17). இவர் சின்னம்மாள்புரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, 18 வயது நிரம்பாத மகளை திருமணம் செய்து கொண்டதாக கூறி ஆசைத்தம்பி தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ராஜ்குமார் மீது போலீசார் குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீது மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேனியில் காதல் திருமணம் செய்த சிறுமி தற்கொலை – போலீசார் விசாரணை!

இந்த நிலையில், நீனாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதில் மனைமுடைந்த நீனா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இகுறித்து ஆசைத்தம்பி புகாரின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பிய பழனிசெட்டிபட்டி போலீசார், மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னம்மாள்புரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.