தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

 

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தாய் இறந்த சோகத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த வெள்ளையம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

தாய் இறந்ததால், அவரது கடைசி மகள் ராஜேஸ்வரி (16) மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தகவல் அறிந்த கரியாலூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.