தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு இல்லாத மாவட்டங்கள் இதுதானாம்!

 

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு இல்லாத மாவட்டங்கள் இதுதானாம்!

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு இல்லாத மாவட்டங்கள் இதுதானாம்!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,756 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 53 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 995ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 24 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் குணமாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு இல்லாத மாவட்டங்கள் இதுதானாம்!

இந்நிலையில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிபேட்டை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 9ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன.தற்போது ஈரோடு மாவட்டத்தில் 136, கோவையில் 116 , சென்னையில் 100 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரியில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கடந்த ஜூன் மாத நிலவரப்படி 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தமிழகத்தில் இருந்தது.