விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்… கட்சிப் பதவிகளில் 50:50 பிரித்துக்கொண்ட இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

 

விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்… கட்சிப் பதவிகளில் 50:50 பிரித்துக்கொண்ட இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் கட்சிப் பதவிகளில் 50, 50 சதவிகிதம் எடுத்துக்கொள்வது என்று எடப்பாடி பழனிசாமியும் ஒ.பன்னீர்செல்வமும் முடிவு செய்திருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை தலைமை ஏற்று சசிகலா நடத்துவார் என்று கட்சியினர் அறிவித்தனர். பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி சசிகலாதான் பொதுச் செயலாளர் என்று முடிவு செய்து, போயஸ்தோட்டம் சென்று சசிகலா காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி அவரை பொதுச் செயலாளராக ஆக்கினார்கள் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள். அதன்பிறகு, சசிகலா தமிழக முதலமைச்சர் ஆக முயன்றபோதுதான் ஓ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்குள்ளாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு தூசிதட்டப்படவே சசிகலா சிறைக்குச் சென்றார்.
தண்டனை காலம் முடிந்து சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். இதனால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பு மிரண்டுபோய் உள்ளது. சசிகலா யார் என்று மேடைகளில் வீர வசனம் பேசினாலும், சசிகலாவிடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்ளனர்.

விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்… கட்சிப் பதவிகளில் 50:50 பிரித்துக்கொண்ட இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்

இதனால், டி.டி.வி.தினகரன் மூலமாக ஓ.பி.எஸ் தரப்பு தூதுவிட்டுக் கொண்டிருந்தது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவே அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அ.தி.மு.க நிர்வாகிகள் எல்லோரும் அப்படியே பொறுப்பு வகித்து வருகின்றனர். சசிகலா வெளியே வந்தால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவருடைய கைகளுக்கு சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தங்களை பலப்படுத்திக்கொள்ள ஒ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்துள்ளனர். தினகரனுடன் ஓ.பி.எஸ் பேசுவது அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்… கட்சிப் பதவிகளில் 50:50 பிரித்துக்கொண்ட இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்
நாம் சின்னம்மாவை நம்புகிறோம், எந்த அளவுக்கு அவர் நம்மை நம்புவார் என்று தெரியாத நிலையில் அவசரப்பட வேண்டாம் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் போது ஓ.பி.எஸ் தரப்பு, இ.பி.எஸ் தரப்புக்கு 50, 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்ற அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி இருக்கும் வரைதான் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு. அதற்கு வேட்டு வைக்கும் வகையில் கட்சிப் பதவி பங்கீடு நடந்துள்ளது என்று மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.