124-ஆவது ஊட்டி மலர்கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்!

ஆண்டுதோறும் கோடைவிழாவின் முக்கிய விழாவான ஊட்டி மலர்கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெறும்.  ஆயிரக் கணக்கான மக்கள், கோடை வெயியில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்து விடுவார்கள். அதே போல இந்த ஆண்டும் மலர்கண்காட்சியை நடத்த கடந்த டிசம்பர் மாதம் முதல் மலர்கள் நடவுப்பணிகள் நடைபெற்று வந்தது. மே 15 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கவிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால், 124 ஆவது மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கான வகையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் தற்போது ஊட்டியில் பூத்துக் குலுங்குகின்றன.

ttnஊழியர்களின் ஊழைப்பால் பூத்துக் குலுங்கும் அந்த மலர் கண்காண்சி பூங்கா  மூடப்பட்டுள்ளதால் யாரும் பார்க்க முடியவில்லை. ஆனால் ஊழியர்களின் உழைப்பை வீணாக்க விரும்பாத நிர்வாகம், வீடியோ காணொளி மூலமாகவும் போட்டோ ஆல்பம் தயாராக்கி வருவதாகவும், சில நாட்களில் இந்த வீடியோ அரசு அனுமதியுடன் வெளியாகும்  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ttnஇந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 124 ஆவது மலர் கண்காட்சியை இன்று பார்வையிட்டார். அப்போது, மக்கள் பார்வையிட இயலாத இந்த மலர் கண்காட்சியை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோர் மனமாற்றத்திற்காக பார்வையிடலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...