சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து மக்களின் நலன் கருதி அவ்வபோது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் நேற்று முன்தினம் 7 ஆம் கட்ட ஊரடங்கு முடிவில் பல்வேறு தாராள தளர்வுகள் தமிழக அரசால் அளிக்கப்பட்டது. இதில் வழிப்பாட்டு தலங்கள், பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.

சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

அதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆலைகள் ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

சிப்காட் பகுதியில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு !

இந்நிலையில் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டதாக தெரிகிறது.