இ-பாஸ் கிடைக்காமல் தவித்த நோயாளிக்கு உதவிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்!

 

இ-பாஸ் கிடைக்காமல் தவித்த நோயாளிக்கு உதவிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம் பழூர் அருகே வாழைக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ராமதாஸ். இவரது மனைவி ராஜகுமாரிக்கு டயாலிசிஸ் பிரச்னையால் கடந்த தஞ்சை தனியார் மருத்துவமனையில் கடந்த 5 மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததால் தஞ்சை மாவட்ட எல்லைகள் மீண்டும் மூடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ராஜகுமாரி மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இ-பாஸ் கிடைக்காமல் தவித்த நோயாளிக்கு உதவிய தஞ்சை மாவட்ட ஆட்சியர்!

இ-பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்ற சூழல் தற்போது நிலவுவதால், ராஜகுமாரி குடும்பத்தினர் இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லையாம். இதனிடையே ராஜகுமாரிக்கு மீண்டும் உடல்நிலை மோசமாகி இருக்கிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ரத்னா, ராஜகுமாரி மருத்துவமனை செல்வதற்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதன் படி தா.பழூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ராஜகுமாரி தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.