‘2000 கிலோ வெங்காயம் பறிமுதல்’ விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

 

‘2000 கிலோ வெங்காயம் பறிமுதல்’ விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

பெரம்பலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பெரம்பலூர் அருகே, இரூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் நேற்று, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ வெங்காயங்களை பறிமுதல் செய்தனர். வெங்காய பதுக்கலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், வெங்காயத்தை பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘2000 கிலோ வெங்காயம் பறிமுதல்’ விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு!

இந்த நிலையில், பெரம்பலூர் அருகே பதுக்கி பறிமுதல் வெங்காயத்தை அம்மா பல்பொருள் அங்காடி மூலம் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. சுய உதவிக்குழுவினர் உதவியுடன் தரமான வெங்காயத்தை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் இந்த பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.