‘ஜனவரி.13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்’ – மத்திய அரசு அறிவிப்பு!

 

‘ஜனவரி.13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்’ – மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு வரும் 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் பாதுகாப்பானது என டி.சி.ஜி.ஐ தெரிவித்திருந்தது. இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் செலுத்தலாம் என்று கூறியிருந்தது. அதன் படி, உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாராகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனாவுடன் போராடிய முன் களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

‘ஜனவரி.13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்’ – மத்திய அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி முதல் தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் தடுப்பூசி சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதால் அந்த இடங்களில் தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் என்றும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.