ஊராட்சித் தலைவிக்கு அவமரியாதை – திமுக மீது திரும்பும் குற்றச்சாட்டு

 

ஊராட்சித் தலைவிக்கு அவமரியாதை – திமுக மீது திரும்பும் குற்றச்சாட்டு

ஆளும் அதிமுகவை நோக்கி திமுக வீசும் ஒவ்வொரு அம்பும் பூமாராங்காக அந்தக் கட்சியையே திருப்பித் தாக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. நீட் விவகாரம் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
லேட்டஸ்டாக தெற்குத்திட்டை ஊராட்சி தலைவி அவமதிப்பு விவகாரமும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

ஊராட்சித் தலைவிக்கு அவமரியாதை – திமுக மீது திரும்பும் குற்றச்சாட்டு


கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ள தெற்குத்திட்டை ஊராட்சித் தலைவியான ராஜேஸ்வரி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இதன் காரணமாக ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அவருக்கு நாற்காலியில் உட்கார அனுமதி அளிக்கப்படவில்லை. தலைவியாக இருந்தாலும் தரையிலேயே உட்கார வைக்கப்பட்டார். துணைத் தலைவரான மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் நாற்காலிகளில் அமர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வந்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ராஜேஸ்வரியை கொடியேற்றவும் அனுமதிக்கவில்லை.இது பற்றிய செய்தி அண்மையில் வெளியாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
வழக்கம்போல திமுக தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டார். ‘’இது தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். ஆட்சி அதிகாரத்தில் பட்டியலினத்தவரும் பங்கேற்று மக்கள் பணியாற்றிட வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது’’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஊராட்சித் தலைவிக்கு அவமரியாதை – திமுக மீது திரும்பும் குற்றச்சாட்டு


ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா!
ஊராட்சித் தலைவி ராஜேஸ்வரி அதிமுகவை சேர்ந்தவர். ஆதிக்க மனப்பான்மையுடன் அவரை தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மோகன்ராஜ் திமுகவை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவமதித்த தனது கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வழக்கம்போல அதிமுக அரசு மீது ஸ்டாலின் பாய்வது எந்த விதத்தில் நியாயம்! என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மூலம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, ஊராட்சி செயலாளரை கைது செய்திருப்பதுடன் தலைமறைவாக இருக்கும் மோகன்ராஜையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஊராட்சித் தலைவிக்கு அவமரியாதை – திமுக மீது திரும்பும் குற்றச்சாட்டு