Home இந்தியா கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு - மூவர் படுகாயம்

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்

தெலங்கானா

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு - மூவர் படுகாயம்

தெலங்கானாவில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், அரசியல் கட்சி நிர்வாகி துக்கியால் சுட்டதில் மூவர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் தாட்டிகுட்டா பகுதியை சேர்ந்தவர் பரூக் அஹமத். அடிலாபாத் நகராட்சி முன்னாள் துணை தலைவரான இவர், எம்.ஐ.எம் கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தாடிக்குட்டா பகுதியில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக சிறுவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ட்ரோன் மூலம் கண்காணிப்பு

இதனால், அவர்களது பெறறோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினையில் ஈடுபட்ட ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பரூக் அஹமத், ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதானல், இருதரப்புக்கும் மோதல் வெடித்த நிலையில், பரூக் அஹமது எதிர் தரப்பினரை நோக்கி 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். மேலும், தன்னிடம் இருந்த கத்தியை கொண்டும் அவர்கள் மீது தாக்கியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு - மூவர் படுகாயம்

இந்த சம்பவத்தில் ஜமீர் மற்றும் பாரூக் மோதேஷ்கான் ஆகியோர் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். பாரூக் மன்னன் என்பவருக்கு கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக பாரூக் அஹமத் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைதுசெய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேர்தல் விரோதம் காரணமாக அவர் துக்கிச்சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு - மூவர் படுகாயம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும்...
- Advertisment -
TopTamilNews