திமுக – அதிமுகவினரிடையே வெடித்த மோதல்.. எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்!

 

திமுக – அதிமுகவினரிடையே வெடித்த மோதல்.. எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, கடந்த 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது. பதவி ஏற்பு விழா முடிந்ததிலிருந்தே அதிமுக- திமுக தொண்டர்களிடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கொரோனா நிவாரண நிதி வழங்குவது முதல் ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது வரை பல்வேறு நிகழ்வுகளில் திமுகவினரும் அதிமுகவினரும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக – அதிமுகவினரிடையே வெடித்த மோதல்.. எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்!

இந்த நிலையில், கோவையில் தடுப்பூசி போடும் மையத்தில் திமுக – அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு எம்எல்ஏ ஜெயராம் மற்றும் அதிமுகவினர் மக்களுக்கு மாஸ்க், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளனர்.

அச்சமயம் அங்கு வந்த திமுகவினர் தடுப்பூசி போட வருபவர்களுக்கு இதையெல்லாம் கொடுக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையேயும் கடும் மோதல் வெடிக்க, அதிமுக எம்எல்ஏ ஜெயராமுக்கு ஆதரவாக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வந்துள்ளார். சிறிது நேர வாக்குவாதத்துக்கு பின் சண்டை முடிந்துள்ளது. கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு உதவ வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடருவது திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளது.