நீட் தேர்வு ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி

 

நீட் தேர்வு ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி

நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா பாதிப்பில் உலக இந்தியாவில இந்தியா மூன்றாவது இடத்துக்கு சென்றுவிட்டது. உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

நீட் தேர்வு ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி
இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜெஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீட் தேர்வு ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால், ஆன்லைனில் நடத்துவது சாத்தியமில்லை. மேலும் நீட் தேர்வு காலதாமதமாக நடத்தப்படுகிறது. இனியும் ஒத்திவைப்பதால் எந்த முன்னேற்றமும் வந்துவிடப் போவது இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்துதான் ஆக வேண்டும். தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் ஓராண்டை இழந்துவிடுவார்கள். தேர்வு நடத்தும் முடிவில் நீதிமன்றம் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் நீட் தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.