தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த ஊழியருக்கு பணிநீக்க நோட்டீஸ்: விமானப்படை பதிலளிக்க உத்தரவு!

 

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த ஊழியருக்கு பணிநீக்க நோட்டீஸ்: விமானப்படை பதிலளிக்க உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் விமானப்படையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. விமானப்படையின் ஜாம்நகர் பிரிவில் அதிகாரியாக உள்ள யோகேந்திர குமார் தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து கமாண்டிங் அதிகாரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த ஊழியருக்கு பணிநீக்க நோட்டீஸ்: விமானப்படை பதிலளிக்க உத்தரவு!

அந்த கடிதத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எனக்கு தயக்கம் உள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்தி வருகிறேன். உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறேன். தடுப்பூசி போட்டு கொள்ளாததால் ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு விமானப் படையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளார். யோகேந்திர குமாரின் விளக்கத்தை விமானப்படை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் இந்திய விமானப் படைக்கும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஜூலை 1ஆம் தேதி வரை பணிநீக்கம் உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.