செலவினம் குறைந்தது.. டிஷ் டிவி இந்தியா நிறுவனம் லாபம் ரூ.49 கோடி..

 

செலவினம் குறைந்தது.. டிஷ் டிவி இந்தியா நிறுவனம் லாபம் ரூ.49 கோடி..

டிஷ் டிவி இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.49.14 கோடி ஈட்டியுள்ளது.

டி.டி.எச். நிறுவனமான டிஷ் டிவி இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிஷ் டிவி இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.49.14 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 34.07 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் டிஷ் டிவி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.74.54 கோடி ஈட்டியுள்ளது.

செலவினம் குறைந்தது.. டிஷ் டிவி இந்தியா நிறுவனம் லாபம் ரூ.49 கோடி..
டிஷ் டிவி இந்தியா

2021 ஜூன் காலாண்டில் டிஷ் டிவி இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 12.51 சதவீதம் குறைந்து ரூ.730.97 கோடியாக சரிவடைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் டிஷ் டிவி இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.835.58 கோடி ஈட்டியிருந்தது. 2021 ஜூன் காலாண்டில் டிஷ் டிவி இந்தியா நிறுவனத்தின் செலவினம் 10.03 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.672.80 கோடியாக குறைந்துள்ளது.

செலவினம் குறைந்தது.. டிஷ் டிவி இந்தியா நிறுவனம் லாபம் ரூ.49 கோடி..
டிஷ் டிவி இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டிஷ் டிவி இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.93 சதவீதம் உயர்ந்து ரூ.19.59ஆக இருந்தது.