12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?… திடீர் ஆலோசனை!

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?… திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரத்தின் படி கிட்டத்தட்ட 8,000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சவாலான சூழலில் தான், வரும் மே 3 ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?… திடீர் ஆலோசனை!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை, திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?… திடீர் ஆலோசனை!

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலாளர் ஆலோசித்த பின் கூட்டத்தின் முடிவுகள் முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அதை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி, பொதுத்தேர்வை ஒத்திவைப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.