கொரோனாவால் திருப்பதி கோயிலுக்கு வந்த சோதனை; முதல்முறையாக கோயில் பணத்தை எடுக்க திட்டம்!

கொரோனாவால் திருப்பதி கோயிலுக்கு வந்த சோதனை; முதல்முறையாக கோயில் பணத்தை எடுக்க திட்டம்!

ஏழுமலையான் கோவிலின் வங்கி பணத்தை எடுப்பது பற்றி இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

கொரோனாவால் திருப்பதி கோயிலுக்கு வந்த சோதனை; முதல்முறையாக கோயில் பணத்தை எடுக்க திட்டம்!

உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக அரசுக்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. குறிப்பாக அதிக வருமானம் ஈட்டும் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த வகையில் ஆந்திரமாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் சன்னதியும் மூடப்பட்டது. இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோயில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் ஒரு முறை கூட வங்கிகளில் சேமிக்கப்பட்டு வரும் கோயில் பணத்தை எடுத்ததே இல்லை.

கொரோனாவால் திருப்பதி கோயிலுக்கு வந்த சோதனை; முதல்முறையாக கோயில் பணத்தை எடுக்க திட்டம்!

ஆனால் இந்த கொரோனாவால் 3 மாதங்களுக்கு மேலாக கோயில் மூடப்பட்டிருப்பதால், திருப்பதிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், பணக்கார கடவுள் என அழைக்கப்படும் ஏழுமலையான் கோவிலின் வங்கிக் கணக்கில் இருந்து முதன் முறையாக பணம் எடுப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடக்க உள்ளது. தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெறும் அந்த ஆலோசனை கூட்டத்தில், திருப்பதி கோயில் பற்றிய 52 விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், பிரமோற்சவம் நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் ஆலோசனை நடக்கவிருக்கிறது. ஆலோசனை கூட்டம் முடிந்த உடன் கோயிலின் பணத்தை எடுப்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.