‘தியேட்டர்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு’ குறித்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

‘தியேட்டர்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு’ குறித்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

தியேட்டர்கள் திறப்பு, ஐபிஎல் போட்டி தியேட்டர்களில் திரையிடல் குறித்து இன்று நடக்கவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே கடந்த 8ஆம் தேதி தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்கள் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

‘தியேட்டர்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு’ குறித்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

இதனைத்தொடர்ந்து, ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தியேட்டர்களில் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக வரும் 15 ஆம் தேதி (இன்று) நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தவும் தியேட்டர்கள் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் முடிவெடுத்திருந்தனர்.

‘தியேட்டர்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு’ குறித்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

இந்த நிலையில் தியேட்டர் திறப்பு, ஐபிஎல் போட்டி தியேட்டர்களில் திரையிடல் உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெறவிருந்த ஆலோசனை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் ஆலோசிக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.