புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை: தமிழக ஆளுநர் பங்கேற்பு!

 

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை: தமிழக ஆளுநர் பங்கேற்பு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றுள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை பல்வேறு புதிய திட்டங்களுக்கு வழிவகுக்கிறது. 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்படும் இந்த கல்விக் கொள்கை, கல்வியில் புரட்சியை உண்டாக்கும் என்றும் 2030க்கும் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே போல தற்போது இருக்கும் கல்விக் கொள்கைக்கு மாறாக இது அமையும் என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை: தமிழக ஆளுநர் பங்கேற்பு!

ஆனால் புதிய கல்விக் கொள்கை மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் அறிவுரையின் படியே இதனை பற்றிய முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதன் படி பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க டெல்லி ராஜ்பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார்.