செயற்கை செரிமான கருவியை கண்டுபிடித்து, தஞ்சை உணவுப்பதன தொழில்நுட்ப கழகம் சாதனை

 

செயற்கை செரிமான கருவியை கண்டுபிடித்து, தஞ்சை உணவுப்பதன தொழில்நுட்ப கழகம் சாதனை

தஞ்சாவூர்

நாட்டிலேயே முதன்முறையாக மனித செயற்கை செரிமான கருவியை உருவாக்கி, தஞ்சையில் உள்ள மத்திய உணவுப்பதன தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.

தஞ்சையில் உள்ள ஐ.ஐ.எப்.பி.டி நிறுவனம் செயற்கை மனித செரிமான கருவியை உருவாக்கி, அதன்மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கருவியின் மூலம் உணவு செரிமானத்திற்கு பின், அதில் உள்ள சர்க்கரை கிரகித்தல் அளவை தெரிந்துகொள்ள முடியும் என கண்டறிந்து உள்ளது. இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை செரிமான கருவியை கண்டுபிடித்து, தஞ்சை உணவுப்பதன தொழில்நுட்ப கழகம் சாதனை

இதுகுறித்து பேசிய தஞ்சை ஐ.ஐ.எப்.பி.டி நிறுவன இயக்குநர் முனைவர் அனந்தராம கிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து கிரகித்தல் சார்ந்த புரிதலை இந்த கருவி மூலம் அறிந்துகொள்ள முடிவதாக கூறினார். தற்போது கிளைசிமிக் குறியீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த செயற்கை செரிமான கருவி மூலம் ஆய்வுமேற்கொள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அவசியம் இல்லாததால் ஆய்வுமுடிவுகள் துரிதமாக கிடைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.