எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் நிறுத்தம்

 

எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் நிறுத்தம்

எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் (NSIGSE) நிறுத்தப்பட்டுவிட்டது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் நிறுத்தம்

இதுதொடர்பாக எம்.பி., ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்காக 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உதவித்தொகை திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு நிறுத்தப்போவதாக ‘தி டெலிகிராப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்த ஒரு செய்தியை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

இந்தத் திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ 3000 உதவித்தொகையை வழங்குகிறது. அந்த மாணவி 18 வயதை எட்டிய பின்னர் பணத்தை திரும்பப் பெறலாம்.அந்த மாணவி பத்தாம் வகுப்பு முடித்தவராகவும் திருமணம் ஆகாதவராகவும் இருந்தால் அந்தத் தொகையைப் பெற முடியும்.

எஸ்சி, எஸ்டி பெண்கள் 18 வயதாகும் முன்பே திருமணம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் பள்ளி இறுதி வகுப்புவரை படிப்பதை உறுதி செய்வதற்காகவும்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 7 மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்த பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (ஐஇஜி) இதை நிறுத்திவிடலாம் என ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இது எஸ்சி எஸ்டி மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.

படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதும், குழந்தைத் திருமணமும் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவினரிடையே இன்னும்கூட பரவலாக உள்ளன. எனவே இப்போதைய தேவை இந்தத் திட்டத்தை நிறுத்துவது அல்ல, இதற்குக் கூடுதலான நிதி ஒதுக்கீடே ஆகும். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடருமாறு நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”எனக் கூறியிருந்தேன்.

எஸ்சி, எஸ்.டி மாணவிகளுக்கான படிப்பு உதவித்தொகைத் திட்டம் நிறுத்தம்

ஜூலை 20 அன்று சந்தித்தபோது ‘மோடி அரசு ஒருபோதும் எஸ்சி எஸ்டி மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தாது. டெலிகிராப் பத்திரிகை செய்தியை அடிப்படையாகக்கொண்டு உங்களைப்போன்றவர்கள் கடிதம் எழுதுவது சரிதானா?’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிந்துகொண்டார். ஆனால் அவரிடமிருந்து இன்று எனக்கு வந்துள்ள கடிதத்தில் ‘2018-19 ஆம் ஆண்டிலேயே அந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறுத்திவிட்டோம்’ என அமைச்சர் கூறியிருக்கிறார்.

மோடி அரசு எஸ்சி மக்கள் கல்வியில் முன்னேறுவதை விரும்பாத அரசு மட்டுமல்ல, வார்த்தை ஜாலங்களால் உண்மையை மூடி மறைக்கும் அரசு என்பதும் அமைச்சரின் பதிலால் உறுதி ஆகிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.