சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை : அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

 

சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை  : அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் அறிந்து வைத்திருந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என இரட்டை தலைமை பிடிவாதமாக இருந்தது.

சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை  : அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

இதையடுத்து சட்டமன்ற தேர்தல் வருகையினால் அதிமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த சூழலில் தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். காரணம் அதிமுக தேர்தலில் தோற்று விட்டால் அதற்கு தான் பலிகடா ஆக கூடாது என அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஒதுங்கி கொண்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். சசிகலாவின் யூகத்தின் படியே சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார். தீவிர அரசியலுக்கு வருவேன், அதிமுகவை மீட்பேன், கட்சியை சிதைந்து போக விடமாட்டேன், என்னை அதிமுகவிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது என்பது போன்ற வாக்குறுதிகளை அவர் நிர்வாகிகளிடம் கொடுத்து வருகிறார்.

சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை  : அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவிடம் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பெரம்பலூர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.