ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

 

ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

ராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், நாளை மறுதினம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

தொடர்ந்து, ஆய்வாளர் ரோகித்குமார் தலைமையில் பேரிடர் மீட்புக்குழுவினர் பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள் குறித்தும், பொதுமக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்..