சசிகலாவுடன்,’ டி.டிவி.’ கருத்து வேறுபாடு – அ.ம.ம.க.வின் புதிய திட்டங்கள்

 

சசிகலாவுடன்,’ டி.டிவி.’ கருத்து வேறுபாடு – அ.ம.ம.க.வின் புதிய திட்டங்கள்

By subas Chandra bose
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க.விலும் கூட்டணிக் குழப்பத்திற்கு குறைவில்லை.பல்வேறு சூழ்நிலைகளில் முடிவுகள் எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறது.அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த அ.ம.மு.க.வை பொறுத்தவரை ‘சின்னம்மா’ சசிகலா விடுதையாகி வெளியில் வரட்டும். பின்னர் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். என்ற முடிவில் இருந்தது. இந்த நிலையில் சசிகலாவின் விடுதலை இப்போதைக்கு இல்லை என்றாகி விட்டது. சசிகலா விடுதலயாகி வெளியில் வந்தால் அதிமுகவை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பார். அப்பொழுது அ.ம.மு.க.வையும் அ.தி.மு.க.வுடன் இணைப்பார் என்பது போன்ற பின்னணித் திட்டங்கள் இருந்து வந்தன.

சசிகலாவுடன்,’ டி.டிவி.’ கருத்து வேறுபாடு – அ.ம.ம.க.வின் புதிய திட்டங்கள்


ஆனால், சமீப காலமாக சசிகலாவிற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டாதகச் சொல்கிறார்கள்.சசிகலா தனக்குறிய வேலைகளையெல்லாம் இப்போது டாக்டர் வெங்கடேஷை வைத்து செய்து கொள்வாதாகவும் சொல்கிறார்கள்.
சசிகலா விடுதலையை தொடர்ந்து வரும் ஜனவரியில் தனது மகள் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்த டிடிவி தினகரன் இப்போது அந்த திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார். தேர்தல் முடிந்து வரும், ஜூன் மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்லலாம் என்று முடுவெடுக்கப்பட்டுள்ளதாம்.

சசிகலாவுடன்,’ டி.டிவி.’ கருத்து வேறுபாடு – அ.ம.ம.க.வின் புதிய திட்டங்கள்


இதற்கிடையே சசிகலா விடுதலையாகி வெளியே வந்து அதிமுகவை ஒருங்கிணத்தாலும் அதிமுகவுடன் இணையப்போதில்லை என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்துள்ளதாம் அமமுக, தற்போது அமமுக சார்பில் போட்டியிட அந்தக் கட்சியில் பலர் விருப்பம் தெரிவித்து கையில் பெட்டியுடன் காத்திருக்கிறார்கலாம்.

சசிகலாவுடன்,’ டி.டிவி.’ கருத்து வேறுபாடு – அ.ம.ம.க.வின் புதிய திட்டங்கள்

அதிமுகவுடன் ஒருங்கிணைந்தால் கட்சியை நம்பியிருக்கும் அவரகளது வாய்ப்புகள் பறிபோகும் என்பதாலேயே டிடிவி தினகரன் இந்த முடிவு எடுத்தாகச் சொல்லப்படுகிறது. அ.ம.ம.மு.கவைப் பொறுத்தவரை பெரிய கட்சிகள் எதனுடாவது சேர்ந்து 3-வது கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். விரைவிலேயே தேர்தல் களம் காணுவது குறித்து டிடிவி தினகரன் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடவும் காத்திருக்கிறார்.