“திட்டங்கள் சிறப்பு சார்…எங்களையும் கொஞ்சம் பாருங்க” : ஸ்டாலினுக்கு சேரன் கோரிக்கை!

 

“திட்டங்கள் சிறப்பு சார்…எங்களையும் கொஞ்சம் பாருங்க” : ஸ்டாலினுக்கு சேரன் கோரிக்கை!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தென்சென்னையில் 250 கோடி ரூபாய் செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், தமிழ் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது, உயர்விருதுகள் பெற்ற தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு மூலமாக வீடு, திருவாரூரில் சேமிப்பு கிடங்குகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

“திட்டங்கள் சிறப்பு சார்…எங்களையும் கொஞ்சம் பாருங்க” : ஸ்டாலினுக்கு சேரன் கோரிக்கை!

இந்நிலையில் இயக்குநர் சேரன், “திட்டங்கள் சிறப்பு சார்.. எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்.

விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்.

மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் ப்ரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.” என்று கூறியுள்ளார்.