பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டிய பங்களா பா.ஜ.க. எம்.பி. அனில் பலுனிக்கு ஒதுக்கீடு….

 

பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டிய பங்களா பா.ஜ.க. எம்.பி. அனில் பலுனிக்கு ஒதுக்கீடு….

டெல்லி லோதி எஸ்டேட்டில் 35 எண்ணுள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமையன்று நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதற்கு பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வாடகை வசூலிக்கப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டிய பங்களா பா.ஜ.க. எம்.பி. அனில் பலுனிக்கு ஒதுக்கீடு….

பிரியங்கா காந்தி அந்த பங்களாவிலிருந்து எப்போது காலி செய்வார் என்ற தகவல் இன்னும் சரியாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த பங்களாவை பா.ஜ.க. நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யும், அந்த கட்சியின் செய்தி தொடர்பாளருமான அனில் பலுனிக்கு எஸ்டேட் இயக்குனரகம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பதா அவர் மேலும் அவர் கூறியதாவது:

பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டிய பங்களா பா.ஜ.க. எம்.பி. அனில் பலுனிக்கு ஒதுக்கீடு….

மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி தற்போது 20, குருத்வாரா ரகாப் கஞ்ச் சாலையில் உள்ள டைப் 6 பிரிவு பங்களாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக பல மாதங்களுக்கு முன்பே தனது பங்களாவை மாற்றும்படி கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது பிரியங்கா காந்திக்கான 35, லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பங்களா அனில் பலுனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா ஒதுக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை. அந்த இரண்டு பங்களாக்களும் டைப் 6 பிரிவு பங்களா என்பதால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பங்களாவை பெற தகுதியானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.