• April
    05
    Sunday

Main Area

Main



இந்தியன்2 விபத்து: அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை! தூக்கமில்லாமல் தவிக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்

Director Shankar
Director Shankar

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் விபத்து தொடர்பாக  4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகுந்த வருத்தத்துடன் இந்த பதிவை பதிவிடுகிறேன். இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்தில் எனது துணை இயக்குநர் மற்றும் படக்குழுவினரை இழந்ததல் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. தூக்கமில்லாத இரவுகளுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கிரேன் தவறி விழுந்ததில் நூலிழையில் தப்பினேன். அந்த கிரேன் என்மீது விழுந்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.