• February
    29
    Saturday

Main Area

Main



'பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிவிடுவேன்': சேரனை அசிங்கப்படுத்தியதால் கொந்தளிக்கும் இயக்குநர் அமீர் 

அமீர்
அமீர்

சென்னை: பிக் பாஸ் அடித்து நொறுக்கிவிடுவேன் என்று இயக்குநர் அமீர் ஆவேசமாகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 60வைத்து நாட்களை நெருங்கியுள்ளது. சண்டை, கோபம், அழுகை, பாசம், நட்பு, காதல் என்று போட்டியாளர்களின் குணத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதில் சேரன் போட்டியாளராக நுழைந்தது தவறு என்று மக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இயக்குநர் சேரனை, சரவணன் ஒருமையில் அழைத்ததை எதிர்த்துப் பல முன்னணி இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல இயக்குநர் ஆமிர் நேற்று ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 'எனக்கு வரும் ஆத்திரத்திற்கு பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து இயக்குநர் சேரனை அழைத்து வரவேண்டும் என்று தோன்றுகிறது. நான், சேரன் மிகப்பெரிய இயக்குநராகப் பார்க்கிறேன். 

cheran

அவருடைய ஆட்டோகிராஃப் படத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனேன். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போதே என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது கிடையாது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர், ஒரு வீடியோவை காட்டி இதை தயவு செய்து பாருங்களேன் என்று கூறினார். அதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னைத் தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் கூறுகிறார். இதைக்கேட்டுத் துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பற்றி சொல்லும் போது என் மனம் அப்படியே துடித்துப்போகிறது. நான் நினைத்தால் பிக் பாஸ் ஸ்டுடியோவையே அடித்து நொறுக்கிப் போட்டுவிட்டு சேரனை அழைத்துக்கொண்டு வரமுடியும். ஆனால் நான் அதைச் செய்யாமல் அமைதி காக்கிறேன். எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான்' என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.