கொரோனா தொற்று சரியாகியும் மருத்துவமனையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் விஜய் பட இயக்குநர்!

 

கொரோனா தொற்று சரியாகியும் மருத்துவமனையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் விஜய் பட இயக்குநர்!

நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய இயக்குநர் மஜீத் சில தினங்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் என்று வடபழனியிலிருக்கும் விஜயா மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது மனைவி சற்று விவரமானவர். முழுமையான கொரோனா டிரீட்மெண்ட்டுக்கு மொத்தம் எவ்வளவு ஆகும் என்று கேட்டார். அதற்கு விஜயா மேனேஜ்மெண்ட் ஆள் சொன்னது 2,80,000/- ரூபாய் ஆகும் என்று. கையிருப்பைக் கணக்குப் பார்த்து ஓகே என்று அங்கேயே சேர்ந்தார்.

கொரோனா தொற்று சரியாகியும் மருத்துவமனையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் விஜய் பட இயக்குநர்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா அவரைவிட்டு ஓடிவிட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்டு, பணத்தை செட்டில் செய்யக் கேட்டபோது ஒருநாள் காத்திருக்கச் சொல்லி (கணக்குப் பார்ப்பதற்காக) அவர்கள் சொன்ன தொகை 3,40,000/- ரூபாய். அவரது மனைவி நிறையக் கேள்விகள் கேட்கவும் அடுத்து அவர்கள் சொன்ன தொகை 4 லட்ச ரூபாய். மஜீதும் வேறு வழியில்லாமல் சில நிர்வாகிகளிடம் விபரம் சொல்ல, அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா அவர்கள் 80,000/- ரூபாய் ஏற்பாடு செய்து நேரடியாக விஜயா ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பி விட்டார். பிரச்சனை முடியவில்லை. இப்போது இறுதியாக அவர்கள் கேட்கும் தொகை 4,65,000/- ரூபாய்.என்ன செய்வதென்று தெரியாமல், இயக்குநர் மஜீத், விஜயா மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.