“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்!

“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்!

சாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளான தந்தை – மகன் போலீசாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் பிணமாக தான் வெளியில் வந்தார்கள். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்!

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் குறித்து சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் போலீசாரை பெருமைப்படுத்திய இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.

“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்!

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஹரியின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்!