• April
    06
    Monday

Main Area

Main



பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதா! தமிழக அரசின் ஊமை குத்தாக இருக்குமோ - இயக்குநர் கெளதமன்

இயக்குநர் கெளதமன்
இயக்குநர் கெளதமன்

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றலாம்.

director gauthaman


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிப் பேரணியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கெளதமன், “டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தடையாணை பிறப்பித்துத்துள்ளார்.

சட்ட நிபுணர் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைப்படி சட்டமியற்றப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில், தமிழர்களுக்கு நல்லது நடப்பதை தடுப்பதற்காக பல அதிகார சக்திகள் இம்மண்ணில் உள்ளன. இந்த சட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சிறப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்” எனக்கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.