யாருக்கு ஓட்டு போட வேண்டும்? இயக்குநர் சேரன் ட்வீட்!

 

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? இயக்குநர்  சேரன் ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைப்பெறவுள்ள நிலையில் திமுக ,அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமராத திமுக தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறது. அதேசமயம் திமுகவுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஆளும் திமுக தரப்பினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

யாருக்கு ஓட்டு போட வேண்டும்? இயக்குநர்  சேரன் ட்வீட்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக ,மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மு க ஸ்டாலின். ஒருபுறமும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பரப்புரைக்கு கடைசி நாளான இன்று தாங்கள் போட்டியிடும் சொந்த தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான சேரன், “6ம் தேதி எலெக்‌ஷன்.. ஓட்டுப்போடுவது உங்கள் கடமை.. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். யார் பேச்சிற்கும் யாரோட அனுதாபியாகவும் இருந்து சிந்திக்கவேண்டாம்..இது உங்களுக்கான உரிமை, உங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் எது தேவையோ.. நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம்பெற எது சமூக மாற்றமாகனும்னு.

குடும்பத்தாருடன் அமர்ந்து பேசுங்கள்.. அவரவர் சார்ந்த துறைகளில் எதில் வளர்ச்சி சிக்கல் இருக்கிறது.. ஏன் தீர்க்கப்படவில்லை.. என்ன செய்தால் அது மாறும், யாரிடம் சரியான சிந்தனை இருக்கிறது என கலந்து பேசுங்கள்.. இலவசமாக கிடைக்கவேண்டியது கல்வியும்,மருத்துவமும் என்பதை நினைவுகொள்ளுங்கள்.

உழைக்கவும், உடலையும் வாழ்வையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிந்திப்பவர்கள் மட்டுமே நம் உண்மையான எதிர்காலம் பற்றி யோசிக்கிறார்கள் என அர்த்தம்.. இது வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியதே… நான் எந்த கட்சி சார்ந்தும் பேசவில்லை.. நாம்தான் ஆளவேண்டும். வாக்களிக்க மறக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.