Home சினிமா "ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி" - இயக்குநர் சேரன் வாழ்த்து!

“ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி” – இயக்குநர் சேரன் வாழ்த்து!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரிக்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த 3 சீசன்களை போலவே இந்த முறையும் தனது தொகுப்பாளர் பணியை சிறப்பாக செய்தார் கமல் ஹாசன். ரியோ, ஆரி, பாலா, சோம், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, ரமேஷ், அர்ச்சனா,நிஷா, சனம் ஷெட்டி, அனிதா, ரம்யா, ஷிவானி, கேபி, ரேகா, சுசித்ரா, சம்யுக்தா என 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஒவ்வொருவராக வெளியேறி டாப் 5ல் ரம்யா, ரியோ, ஆரி, பாலா,சோம் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் இறுதியில் சோம், ரம்யா, ரியோ என வரிசையாக வெளியேற பிக் பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் நடிகர் ஆரி அர்ஜுனன். இதை தொடர்ந்து ஆரிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. உங்களின் வெற்றியால் ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான்.. வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தனது மற்றொரு ட்வீட்டில்,” BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மைமுகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

பெரும்பாலானோருக்கு கண்ணின் கீழ் கருவளையம் இருக்கும். இது பல்வேறு காரணங்களால் உருவாகிறது. இதை நீக்குவது அவ்வளவு கடினமான வேலையல்ல. கருவளையங்களை எப்படி எளிதாக நீக்குவது என்பது குறித்து மருத்துவர்களே சொன்ன...

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? வைகோ விளக்கம்

திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய வைகோ, “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள்...

மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம்: கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில...

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

திருவாரூர் திருவாரூர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்க சென்ற தொழிலாளி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர்...
TopTamilNews