சசிகலா வீர தமிழச்சிதான்? ஏன் தெரியுமா? : அடித்து சொல்லும் பாரதிராஜா

 

சசிகலா வீர தமிழச்சிதான்? ஏன்  தெரியுமா? : அடித்து சொல்லும் பாரதிராஜா

சசிகலாவை சமீபத்தில் சந்தித்து பேசிய இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்த போது, சசிகலா என்ற வீர தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன். பார்த்து விட்டேன் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சசிகலா வீர தமிழச்சிதான்? ஏன்  தெரியுமா? : அடித்து சொல்லும் பாரதிராஜா

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா, “சசி அம்மாவை 32 வருஷமா எனக்கு தெரியும். நான்கு வருடம் சிறையில் இருந்த அந்த அம்மா ஓடி ஒளியாம, மக்களை சந்திப்பேன்னு துணிச்சலா சொன்னாங்க. அதனால்தான் அவங்களை வீரத்தமிழச்சின்னு சொன்னேன். இனியும் சொல்வேன். ஜெயலலலிதா அம்மாவுக்கு துணையா இருந்து பல கஷ்டங்களை பார்த்தவர். அவர் பட்ட கஷ்டங்களை வேற யாரும் செய்யமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வந்துள்ளார். அதனால் மரியாதை நிமித்தமாக அவரை சென்று பார்த்தன். இதில் என்ன தப்பு இருக்கிறது” என்றார்.

சசிகலா வீர தமிழச்சிதான்? ஏன்  தெரியுமா? : அடித்து சொல்லும் பாரதிராஜா

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா கடந்த 9 ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அவரை இயக்குநர் பாரதிராஜா, சீமான், ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த அவர், நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தார். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து அம்மாவின் ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் என உளமார்ந்த நன்றி என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.