‘திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது’.. படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை!

‘திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது’.. படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் படைப்பிடிப்பை நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன் படி தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கிவிட்டன. ஆனால் இப்போது வரை வெள்ளித்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரைப்படத் தொழிலாளர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, பல படங்களின் படப்பிடிப்பு கிடப்பில் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது’.. படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை!

இந்த நிலையில் திரைத்துறை படப்பிடிப்புக்கு அனுமதி தர வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி படைப்பிடிப்பை நிறுத்தி 150 நாட்கள் ஆகிவிட்டதாகவும் 50க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதாகவும் ஏற்கனவே ஏழை தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது’.. படப்பிடிப்புக்கு அனுமதி தாருங்கள்: இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை!

மேலும், திரைத்துறைக்கான வழிமுறைகளோடு கூடிய வழிகாட்டலை வகுக்க வேண்டும் என்றும் சின்னத்திரை படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டதை போல எங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.