கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை!

 

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை!

கீழமை நீதிமன்றங்களில் வரும் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களையும் உடனடியாக மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன் படி, பள்ளி கல்லூரிகள், கோவில்கள், தியேட்டர்கள், மால்கள், நீதிமன்றங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு எப்போது குறைகிறதோ அப்போது தான் அவை மீண்டும் திறக்கப்படும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மூடப்பட்ட நீதிமன்றங்கள் தற்போது வரை திறக்கப்படவில்லை. முக்கியமான வழக்குகள் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு வருகின்றன.

கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை!

தற்போது பாதிப்பு குறைந்து எல்லா சேவைகளுக்கும் அரசு அனுமதி அளித்திருப்பதால், நீதிமன்றங்களில் நேரடி விசாரணையை எப்போது நடத்துவது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது. அதன் முடிவில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் இரு அமர்வுகளிலும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களிலும் கூட செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், நேரடி வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு முடிவு எடுத்துள்ளது.